நெல்லை பெருமாள்புரத்திலுள்ள திருநகரில் கடந்த 13ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராஜம்மாள் என்பவர் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இதுபோல பெருமாள்புரம் அன்புநகர் அருகேயுள்ள ராம்நகரை சேர்ந்த இசக்கியம்மாளை மர்ம நபர் கொலை செய்தார்.
இவ்விரு கொலைகளும் ஓரே கோணத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதை துரிதமாக விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கும் நடவடிக்கையை எடுக்காமல் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் யார் பெரியவர் என்ற மோதலில் குதித்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உளவுத்துறையை சேர்ந்த போலீஸார், சட்டம் ஒழுங்கு போலீசார், மற்றும் தனிப்பிரிவு போலீசார் இடையே தகவல் தொடர்பு சரியான முறையில் இல்லை. மேலும் ஒரு பிரிவு போலீசார் மற்ற பிரிவு போலீசாரிடம் தகவல் கேட்டால் பாதி தெரிவித்தும் மீதியை மறைத்தும் வருகின்றனர். மேலும் சரிவர தகவல்களும்ம் கூறுவது இல்லையாம்.
தாங்கள்தான் பெரியவர் என்று மேலதிகாரிகளிடம் காட்டிக் கொள்வதற்காக இந்த ஈகோ மோதலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.