லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் காரின் கனவு நிஜமாகிறது

Volkswagen XL 1இதுவரை கான்செப்ட் நிலையிலிருந்த லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் காரின் உற்பத்தி நிலை மாடலை ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கிறது ஃபோக்ஸ்வேகன். கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எஸ்போவில் எக்ஸ்எல்-1 என்ற கான்செப்ட் காரை ஃபோக்ஸ்வேகன் வைத்திருந்தது குறித்து ஏற்கனவே செய்தி வழங்கினோம். ஆனால், இந்த கார் உற்பத்தி நிலையை எட்டியிருப்பதுதான் இப்போதைய பரபரப்பு.
பரபரப்புக்காக மட்டுமின்றி கனவுகளை நிஜமாக்கும் விதமாக இந்த அதிக மைலேஜ் தரும்  காரை தற்போது நடைமுறையிலும் சாத்தியமாக்கியிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன். அதாவது 0.9 லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை செல்லும் என்பதுதான் ஹைலைட்.

ஹைபிரிட் கார்


அதிக மைலேஜ் தருவதற்காக இந்த காரை ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைத்துள்ளது ஃபோக்ஸ்வேகன். புதிய 2 சிலிண்டர் டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இந்த மைலேஜ் அளவை தரும். இதில், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சின் பவர் 
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் 48 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
எலக்ட்ரிக் மோட்டார்
இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார் 27 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். லித்தியம் அயான் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் 50 கிலோமீட்டர் வரை பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் மூலம் செல்லலாம்.
டாப் ஸ்பீடு 
இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 0-100 கிமீ வேகத்தை 12.7 வினாடிகளில் கடந்துவிடும்.
ஏரோடைனமிக்ஸ் டிசைன்
அதிக மைலேஜ் தருவதற்காக தங்கு தடையின்றி செல்லும் விதத்தில் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருக்கிறது. இந்த கார் வெறும் 795 கிலோ மட்டுமே எடை கொண்டது.
ஆச்சரியம், ஆனால் உண்மை இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சீராக செல்வதற்கு 8.4 பிஎஸ் பவர் போதுமானது. அந்த அளவுக்கு சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்தில் வடிவமைத்துள்ளனர்.
கார்பன் புகை வெளியீடு 
இந்த கார் கிலோமீட்டருக்கு வெறும் 21 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக கருதலாம்.
வடிவமைப்பு 3,888 மிமீ நீளம், 1,665 மிமீ அகலம் மற்றஉம் 1,153 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலோவைவிட குறைவான உயரத்தை கொண்டிருக்கும்.
இன்டிரியர் 
அடுத்த தலைமுறைக்கான அம்சங்கள் கொண்டதாக இன்டிரியர்.
 
பத்தாண்டு கால முயற்சி 
கடந்த 2002ம் ஆண்டு முதன்முறையாக கான்செப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் இந்த காரை அறிவித்தது. இந்த நிலையில், இத்துனை காலம் கழித்து உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் மாடலை ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. இந்த காரின் விலை உள்ளிட்ட விபரங்களை ஃபோக்ஸ்வேகன் இதுவரை வெளியிடவில்லை.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: