பட்ஜெட் வீடுகள், விலையுயர்ந்த வீடுகளை சக்தி தகுந்தவாறு கட்டுவது போன்று வாகனங்களிலும் விரும்பும் வசதிகளுடன் மாற்றியமைத்து நடமாடும் வீடுகளை பட்ஜெட்டிற்கு தகுந்தபடியும், விரும்பிய வசதிகளோடும் வாங்க முடியும். அதில், உலகின் மிக விலையுயர்ந்த மோட்டார் ஹோம் எனப்படும் நடமாடும் வீட்டைத்தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
மார்ச்சி மொபைல் என்ற நிறுவனம் எலிமன்ட் பிளாசோ என்ற பெயரில் விற்பனை செய்து வரும் இதனை வீடு என்று அழைப்பதை விட நடமாடும் அரண்மனை என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். சொர்க்கபுரியில் வசிக்க விரும்புவர்களின் கனவை நனவாக்கும் விதத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மோட்டார் ஹோம்தான் உலகின் மிக விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. ரூ.15 கோடி மதிப்புடைய இந்த மோட்டார் ஹோம் பற்றிய கூடுதல் தகவல்களை காணலாம்.
சாலையின் கப்பல்
சாலையில் மிதந்து வரும் கப்பல் போன்று இருக்கிறது இதன் டிசைன். முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட இந்த மோட்டார் ஹோம் மல்டி ஆக்ஸிலில் கட்டப்பட்டிருக்கிறது. இதில், 530 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
எஞ்சின்

இந்த நடமாடும் வீட்டை 530 பிஎச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின்தான் உயிர் கொடுக்கிறது. மேலும், இதன் பிரத்யேக காற்றியக்கவியல் வடிவமைப்பு மூலம் 20 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.
3 மாடல்கள்

எலிமன்ட் பிளாசோ நடமாடும் வீடுகள் மூன்று மாடல்களில் வருகின்றன. முதல் மாடலில் தானியங்கி முறையில் திறக்கும் பார், லாஞ்ச் பகுதி, மாஸ்டர் பெட்ரூம் என அனைத்து வசதிகளும் இருக்கும்.
நடமாடும் அலுவலகம்

இரண்டாவது மாடல் வர்த்தகர்களுக்கு ஏற்ற வகையிலானது. கூட்ட அறை, மஸாஜ் வசதிகள் என இதிலும் வசதிகள் ஏராளம். உலகின் மிக சொகுசான நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது.
எலிமென்ட் விஷன்

முன்மாதிரி வசதிகள் கொண்ட இந்த மாடல் மார்க்கெட்டிங் மற்றும் கண்காட்சிகளுக்கு பயன்படுத்தப்படுத்தலாம். பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு 200 சதுர அடி பரப்பு கொண்ட தரைத்தளம் உள்ளது.
வசதிகள்

வெப்பப்படுத்திக் கொள்ளும் வசதி கொண்ட தரை, ப்ளாட் ஸ்கிரீன் டெலிவிஷன், மொபைல் இன்டர்நெட் மற்றும் ஏராளமான வசதிகளை இந்த மோட்டார்ஹோம் கொண்டிருக்கிறது.
விலை

ரூ.15 கோடி மதிப்பீட்டில் இந்த மோட்டார் ஹோம் விற்பனை செய்யப்படுகிறது.
பின்புற வடிவமைப்பு

முகப்பு மற்றும் இன்டிரியரில் அசத்தும் இந்த மோட்டார் ஹோமின் பின்புற வடிவமைப்பு அவ்வளவாக கவரும் வகையில் இல்லை.
வரைபடம்

மோட்டார் ஹோமின் வரைபடத்தை படத்தில் காணலாம்.