லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 400 குழந்தைகளை கொலை செய்துள்ளார்.
இங்கிலாந்து தேசிய ஆவண காப்பகம் 1770ம் ஆண்டு முதல் 1934ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 2.5 மில்லியன் வழக்குகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் எமிலியா டயர் என்ற பெண் தான் இருப்பதிலேயே அதிக கொலைகள் செய்து 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்துள்ளார். அவர் திருமணமாகாமல் குழந்தை பெறும் பெண்களைத் தேடிப் பிடிப்பார்.
அவர்கள் எமிலியாவுக்கு பணமும் கொடுத்து குழந்தையையும் தத்து கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணத்தை வாங்கியவுடன் குழந்தையை டெய்லர்கள் அளவு எடுக்க பயன்படுத்தும் டேப்பை வைத்து கழுத்தை நெறித்துக் கொன்று உடல்களை தேம்ஸ் நதியில் வீசியுள்ளார்.
அவர் 30 ஆண்டுகளில் 400 குழந்தைகளை கொன்றுள்ளார்.