தூத்துக்குடி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் - காதலன் உள்பட 12 பேர் கும்பல் 3 நாட்கள் கற்பழிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை அவரது காதலன் ஏமாற்றி கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று அங்கு ஹோட்டலில் தங்க வைத்து மயக்கமருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவன் தவிர மேலும் 11 பேரும் இந்த பயங்கரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரை ராஜேஷ் என்ற வாலிபன் காதலித்துள்ளான். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மோசடியாக லட்சுமியை கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு ஹோட்டலில் இருவரும் தங்கியுள்ளனர். அங்கு லட்சுமிக்கு மயக்க மாத்திரை கொடுத்துள்ளான் ராஜேஷ். 

பின்னர் தனது நண்பர்களை வரவழைத்துள்ளான். கிட்டத்தட்ட 12 பேர் அங்கு கூடியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த 3 நாட்களாக மாறி மாறி லட்சுமியை சீரழித்துள்ளனர். மயக்க நிலையிலேயே பெரும்பாலும் அவர்கள் லட்சுமியை வைத்திருந்ததாக தெரிகிறது. 

அதன் பின்னர் லட்சுமியை காரில் ஏற்றி நேற்று இரவு கேரள மாநிலம் கொட்டாரக்காரா என்ற இடத்தில் விட்டு விட்டுப் போய் விட்டனர். அரை மயக்க நிலையில் கிடந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அரசு மருத்துவமனையில் தொடர்ந்து மயக்க நிலையில் லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். 

லட்சுமிக்கு தாய் தந்தை இல்லை என்று கூறப்படுகிறது. அவரது அக்கா, திருவனந்தபுரத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. லட்சுமிக்கு மயக்கம் தெளிந்தால்தான் ராஜேஷ் உள்ளிட்டோர் குறித்த விவரம் தெரிய வரும். 

தூத்துக்குடிப் பெண்ணை 12 பேர் சேர்ந்து 3 நாட்கள் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் தூத்துக்குடிப் பெண்ணை மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கைக் கோரி பாஜக கட்சியினர் கொட்டாரக்காரா மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: