இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது.
அபுதாபியின் இளவரசர் மொஹமட் பின் சயிட் பின் சுல்தான் அல் நயான் ஐக்கிய இராச்சியத்தின் இராணுவத்தின் பிரதி உயர்கட்டளைத் தளபதியும் ஆவார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுமியொருவர் வீதியில் தனியாக நின்றுகொண்டிருப்பதினை கண்டுள்ளார்.
இதனையடுத்து தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி அச்சிறுமியிடம் சென்று அவ்விடத்தில் நின்றுகொண்டிருப்பதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.
தான் தனது தந்தை வரும் வரை காத்துக்கொண்டிருப்பதாக சிறுமி பதிலளித்துள்ளார்.இதனையடுத்து சிறுமியை அவளது வீட்டில் கொண்டு போய் சேர்க்கவா என இளவரசர் கேட்டுள்ளார். இதற்கு அச்சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதன்போது வந்திருப்பவர் இளவரசர் என அவரின் உதவியாளர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அச்சிறுமி வந்திருப்பவர் மன்னர் என தனக்கு தெரியுமமெனவும் ஆனால் தந்தை முன் பின் தெரியாத நபர்களுடன் செல்லவேண்டாம் என தனக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மன்னர் அச்சிறுமியின் தந்தை வரும் வரை அவருடனே வீதியில் காத்திருந்துள்ளார். இக் காட்சியை சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் படம்பிடித்துள்ளனர்.
தற்போது அப்படம் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மன்னரின் இரக்க குணம் தொடர்பில் பலர் பாராட்டுக்களை இணையதளம் மூலம் தெரிவித்த வண்ணமுள்ளனர்.