போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடந்ததால் கொதிப்படைந்த மாணவிகள், ஆசிரியரை ஓட ஓட விரட்டித் தாக்கியதால் பெரும் பரபரப்பாகிப் போனது.
அந்தப் பேராசிரியரின் பெயர் சந்தோஷ் திவாரி. இவர் ரேவா கல்லூரியில் பணியாற்றிவருகிறார். ஜனவரி 29ம் தேதி இவர் தனது கல்லூரி மாணவியர் சிலரிடம் தகாத முறையில் நடந்ததாகதெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சக மாணவியரிடம் தெரிவித்தனர்.
கொதிப்படைந்த அவர்கள் மொத்தமாக் சேர்ந்து வந்து திவாரியைத் தாக்க ஆரம்பித்தனர். பயந்து போன அவர் அங்கிருந்து ஓடினர். ஆனாலும் விடாமல் தொடர்ந்து தாக்கினர் மாணவிகள். கல்லூரியை விட்டு வெளியே ஓடினார் ஆசிரியர். அப்படியும் விடாமல் மாணவியர் துரத்தினர். அதைப் பார்த்து பொதுமக்களும் திரண்டு வந்தனர். அனைவரும் சேர்ந்து ஆசிரியரைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் அவரை போலீஸாரிடம் கொண்டு போய் ஒப்படைத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தை உள்ளூர் டிவியில் வேறு ஒளிபரப்பு செய்து விட்டனர்.
சில்மிஷம் செய்து அடிவாங்கிய பேராசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.