அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தின் Museum of Natural History எனும் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களினாலேயே இப்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிலந்தி நண்டுகளின் படிமங்களாக இருக்கலாம் என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், இந்த வகை நண்டுகளில் Cretamaja granulata மற்றும் Koskobilius postangustus எனும் இருவகையான இனங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

