ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக தெரியும் தலைவர்கள் மத்தியில் அவர்களது அந்தஸ்தை உயர்த்துவதிலும், பாதுகாப்பதிலும் கார்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் நம் நாட்டின் ஜனாதிபதி பிரணாப் வரை பயன்படுத்தும் கார்கள் அந்த பதவிக்கு கூடுதல் மதிப்பை வழங்குகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தும் கார்களில் பிரத்யேக வசதிகள், உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் என கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த செய்தித் தொகுப்பில் உலகின் பல்வேறு நாட்டு அதிபர்கள் மற்றும் தலைவர்களால் பயன்படுத்தப்படும் கார்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
அதிகாரப்பூர்வ கார் ஒவ்வொரு நாட்டை ஆளும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஏராளமான கார்களை வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரை அதிகாரப்பூர்வமான காராக பயன்படுத்துகின்றனர். அதுபோன்று, உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார் மாடல் குறித்து தொகுப்பில் காணலாம்.
பென்ஸ் எஸ்600 புல்மேன்

நம் நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் காரைத்தான் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துகிறார். இந்த கார் உலகின் 90 நாடுகளில் பென்ஸ் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவி வகித்தபோது இந்த லிமோசின் ரக கார் வாங்கப்பட்டது.
கேடில்லாக் ஒன்

அமெரிக்க அதிபர் ஒபாமா கேடில்லாக் ஒன் காரை பயன்படுத்துகிறார். குண்டுவெடித்தால் கூட சேதமடையாத தொழில்நுட்பத்துடன் இந்த கார் கட்டப்பட்டிருக்கிறது. இதுதவிர, செயற்கைகோள் இணைப்புடன் கூடிய தொலைபேசியும் உண்டு. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்திடம் பயிற்சி பெற்றவர்தான் இந்த காரை ஓட்டுகிறார்.
டொயோட்டா செஞ்சூரி ராயல்

ஜப்பானிய பேரரரசர் அகிட்டோ டொயோட்டாவின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட காரை பயன்படுத்துகிறார். இந்த கார் செஞ்சூரி ராயல் என்றழைக்கப்படுகிறதது.
பென்ஸ் எஸ் கிளாஸ்

ஜெர்மனி ஜனாதிபதி ஜோசிம் கவுக் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார். இதுதவிர, பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் நிறுவனங்களின் கார் மாடல்களும் இவரிடம் இருக்கிறது.
ஜாகுவார் எக்ஸ்ஜே8

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் சில காமன்வெல்த் நாடுகளில் நியூஸிலாந்தும் ஒன்று. இந்த நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜாகுவார் எக்ஸ்ஜே8 காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
டொயேட்டா பிரிமியம் செடான்

ஹாங்காங் கவர்னர் சீன அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கவர்னர்தான் ஹாங்காங்கை நிர்வகித்து வருகிறார். டொயேட்டாவின் லெக்சஸ் பிரிமியம் செடான் கார்தான் அவரது அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்படுகிறது.
ஜாகுவார் எக்ஸ்ஜே

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் ஜாகுவார் எக்ஸ்ஜே காரைத்தான் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
கிளாசிக் டெய்ம்லர் டிஎஸ் 420

சுவீடன் நாட்டின் அரசர் கிளாசிக் டெய்ம்லர் டிஎஸ் 420 காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
லான்சியா ஃபிளமினா லிமோசின்

இத்தாலி பிரதமல் ஜார்ஜியோ நபோலிடானோ கஸ்டமைஸ் செய்யப்பட்ட லான்சியா ஃபிளாமினா லிமோசின் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
பென்ஸ் எஸ் கிளாஸ்

ரோமானிய ஜனாதிபதி மற்றும் இதர அதிகாரிகள் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகின்றனர்.
மேபேக் எஸ்62

மலேசியாவின் அரசர் மேபேக் எஸ்62 காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வருகிறார்.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350எல்

சிங்கப்பூர் ஜனாதிபதி டான் கெங் யாம் டோனி சிங்கப்பூர் ஜனாதிபதி மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350எல் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
கேலக்ஸி எக்ஸ்எல்

சிலி அதிபர் ஃபோர்டு நிறுவனத்தின் கேலக்ஸி எக்ஸ்எல் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார். இது கன்வெர்ட்டிபிள் கார் என்பதால் அதிபரின் பாதுகாவலர்கள் எந்த நேரமும் கூடுதல் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அவசியம்.
பென்ஸ் எஸ் கிளாஸ்

குரோஷிய அதிபர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்ய.
பென்ஸ் எஸ்600 புல்மேன்
கென்ய அதிபர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் காரை பயன்படுத்துகிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கார்: சிறப்பு பார்வை
குடியரசுத் தலைவரானதும் பிரணாப்புக்கு கிடைக்கப் போகும் சலுகைகளின் பட்டியலை தயாரித்து மீடியாவிற்கு கை வலி கண்டதுதான் மிச்சம். இதில், முக்கியமானது அவர் வசிக்கப் போகும் அதிகாரப் பூர்வமான இல்லமான குடியரசுத் தலைவர் மாளிகை. அடுத்து அவரது கார்.
ஆம், இதுநாள் வரை அம்பாசடர் காரில் விரைந்து விரைந்து சென்று வேலை பார்த்த பிரணாப் இனி கஸ்டமைஸ் செய்யப்பட்ட பென்ஸ் காரில்தான் வலம் வரப் போகிறார். இனி பாதி வேலையை காரிலேயே முடிக்கும் அளவுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட 12 கோடி மதிப்புடைய இந்த கார் கடந்த ஆண்டுதான் வாங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்காக ஆர்டர் செய்து வாங்கப்பட்டது. ஆனால், அவர் வெறும் 8 மாதங்களே பயன்படுத்திய நிலையில், தற்போது அந்த கார் பிரணாப் வசமாகிறது.
கடந்த ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை பயன்படுத்தி வந்தார். அந்த கார் அதற்கு முந்தைய ஜனாதிபதி அப்துல் கலாம் பதவி வகித்தபோது வாங்கப்பட்டது.
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய லிமோசின் ரக காரை ஜனாதிபதி மாளிகை வாங்கியது. அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் பயன்படுத்தும் லிமோசின் ரகத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் மாடல் கார் ஜனாதிபதி பயன்படுத்தும் வகையில், லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது. கையெறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் கூட இந்த கார் சேதமடையாது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் விஷேச புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.
பஞ்சரானால் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரைவிட 115 செமீ கூடுதல் நீளம் கொண்ட வீல் பேஸ் கொண்டிருப்பதால் உள்பக்கம் தாராளமான இடவசதியை இந்த கார் கொண்டிருக்கிறது. அதாவது, ஓர் விசாலமான அறையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும்.
மேலும், அவசர காலத்தில் சிறிய கூட்டம் மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக தொலைதொடர்பு வசதிகள் கொண்டதாக இருக்கிறது. மேலும், பொழுதுபோக்குக்காக டிவி உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. சிறப்பு ஏர்இன்டேக் சிஸ்டம் மூலம் அசுத்த காற்றை சுத்திகரித்து காருக்கு வெளியில் அனுப்பும் வசதியும் இருக்கிறது.
இந்த காரில் 5513 சிசி திறன் கொண்ட (5.5 லிட்டர்) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 517 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். ஏதெனும், அவசரம் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் சிட்டாய் பறந்துவிடும் ஆற்றல் படைத்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை ஓர் ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு வடிவமைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்

அதிபருடன் பணியை துவங்கிய தி பீஸ்ட் 2009ம் ஆண்டு ஜனவரி 20ந் தேதி அதிபரின் அதிகாரப்பூர்வமான காராக பணியில் இணைந்தது தி பீஸ்ட் என்று ரகசியமாக அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா கார்.

நிழல் போல் தொடரும் பயணம் உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில் செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்.

ஒபாமாவுக்கு ரிசர்வ்டு இருக்கை முன்னோக்கிய பின் வரிசை இருக்கையில் வலது பக்க இருக்கையில்தான் அதிபர் ஒபாமா அமருவார். இந்த இருக்கையில் அவரை தவிர வேறு யாரும் அமர அனுமதி கிடையாது.

கடல் தாண்டிய பயணம் அதிபர் ஒபாமா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள் காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கண்ணீர் புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

2வது முறையாக அதிபர் அமெரிக்க அதிபராக 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளதால் இந்த காரையே தொடரந்து பயன்படுத்த உள்ளார் ஒபாமா.