ஜப்பான் கடல் உயிரின காப்பகத்தில் பராமரிக்கப்படும் ஐசோபோட் எனப்படும் உயிரினம் கடந்த நான்காண்டுகளாக உணவு ஏதும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக உள்ளது.
ஜப்பானின் மீயி மாகாணத்தில் உள்ள டோபா கடல்வாழ் உயிரின காப்பகத்திற்கு, மெக்சிகோ கடல் பகுதியில் இருந்து 1 கிலோ எடையுள்ள 'ஐசோபோட்' உயிரினம் கடந்த 2007ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த உயிரினத்திற்கு உணவு வழங்கப்பட்டது. 'மேக்கரல்' என்ற மீன் உணவை ஐந்து நிமிடத்தில் தின்று தீர்த்த இந்த உயிரினம் அதற்கு பின்பு 1,500 நாட்களாக எந்த உணவையும் உட்கொள்ளவில்லை.
வழக்கமாக தினமும் அதன் எடை அளவிற்கு உணவை உட்கொள்ளும் இந்த உயிரினம் நான்கு ஆண்டுகளாக சாப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வழக்கம் போல் செயல்படுவதாகவும் கடல் உயிரின காப்பாளர்கள் கூறுகின்றனர்.
