வாக்கிங் சென்றவருக்கு திமிங்கல’வாந்தி’யால் அடித்த லக்!


 Man Offered 65k Lump Whale Vomit இங்கிலாந்தில் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் "வாந்தி" முலம் ஒருவருக்கு லக் அடித்துள்ளது. 

ஆம் அதன் மூலம் லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார் அந்த நபர். 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கென் வில் மென். வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த பாறை போன்ற ஒரு பொருளை அவரது நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது. 

முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் நடக்க தொடங்கினார். ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள் என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தார். அப்பொழுது, துர்நாற்றமும் நறுமணம் கலந்து ஒரு மாதிரி கலவையாக வீசவே, அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். 

பின்னர்தான் அது திமிங்கலம் எடுத்த வாந்தி என தெரியவந்தது. சில நேரங்களில் திமிங்கலம் தான் உட்கொண்ட உணவை வயிற்று கோளாறு காரணமாக உடனடியாக வெளியே தள்ளிவிடுமாம். அந்த கழிவு பல மாதங்கள் கடல் நீரில் மிதந்தவாறு இருக்கும். மேலும் அதன் மீது வெயில் பட பட பறை போன்று இறுகி பின்பு கடற்கரையில் ஒதுங்குகிறது. இது பெர்ப்பியூம் தயாரிக்க பயன்படும் மிக முக்கியமான மூலப்பொருள். இதுதான் கடற்கரையில் வாக்கிங் போனபோது கென் வில் மென்க்கு கிடைத்துள்ளது. 

மிக அபூர்வமாக அதுவும் இயற்கையாக கிடைக்கும் இதன் விலை மிக மிக அதிகம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த திமிங்கல வாந்தியை ஏற்கனவே 65 ஆயிரம் டாலருவுக்கு (சுமார் 35 லட்சம் இந்திய ரூபாய்) விலை தர முன்வந்துள்ளார். ஆனால் திமிங்கலத்தின் வாந்தியை பரிசோதனை செய்து அதன் உண்மை விலையை கண்டு அறிந்த பின்னர் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார் கென் வில் மென்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: