தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 5 வயது சிறுமி ஏர்கன் துப்பாக்கியை வைத்து விளையாடிய போது குண்டு பாய்ந்து அவரது தாய் பலியானார்.
கொற்கை கிராமத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ், அமலா தம்பதியினரின் மகள் 5 வயது சிறுமி கேத்ரின். அந்தோணிராஜின் இளைய சகோதரர் சில்வர்ஸ்டார் தனது துப்பாக்கியால் வேட்டையாடிய பறவைகளை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். துப்பாக்கியின் விசையை கேத்ரின் தற்செயலாக அழுத்த, குண்டு பாய்ந்து அமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஏரல் காவல்துறையினர், உயிரிழந்த அமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியிடம் ஏர்கன் துப்பாக்கியை விளையாடக் கொடுத்த, அச்சிறுமியின் சித்தப்பாவின் நண்பரான ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சில்வர்ஸ்டார் மற்றும் சிறுமி கேத்ரினிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.