ஆண்களே! பிம்பிள் அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...

சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதே காரணம். இத்தகைய பிரச்சனைக்கு பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அதற்கு ஆண்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக நிறைய அழகுப் பொருட்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எந்த ஒரு பலனும் இல்லை. அவற்றைப் பயன்படுத்துவதால், பருக்கள் மற்றும் பிம்பிள் அதிகமாகிறதே தவிர, குறைவதில்லை. அதுவே இயற்கை முறையில், வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஒருசில செயல்கள் மூலம் சரிசெய்யலாம். 

சரி, இப்போது ஆண்களின் முகத்தில் இருக்கும் பிம்பிள் மற்றும் முகப்பருக்களை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!! 

கிளின்சிங்: பொதுவாக பருக்கள் மற்றும் பிம்பிளைப் போக்க மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தி, முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் கிளின்சிங் செய்வதால், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும். மேலும் முகப்பரு மற்றும் பிம்பிள் உடைந்து, பரவாமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனைத் தரும். இது ஆண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு முறை. எனவே ஆண்கள் இதனை குறைந்தது வாரத்திற்கு 2-4 முறை செய்வது நல்லது. 

ஷேவிங் முறை: பருக்கள் இருக்கும் ஆண்கள் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு பருக்கள் வருவதற்கு ஷேவிங் முறையும் ஒரு காரணம். எனவே ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக, நல்ல கூர்மையான பிளேடுகளை பயன்படுத்தி, பிம்பிள் உள்ள இடத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். 

ஐஸ் கட்டி: பருக்களை போக்கும் சிறந்த பொருட்களுள் ஐஸ் கட்டியும் ஒன்று. அதற்கு ஐஸ் கட்டியை பிம்பிள் உள்ள இடத்தின் மேல் வைக்க வேண்டும். வேண்டுமெனில் மூல்தானி மெட்டி, எலுமிச்சை மற்றும் சந்தனப் பவுடரை கலந்து, அதனையும் பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து, பின் ஐஸ் கட்டியை வைத்து தேய்க்க வேண்டும். இதனால் அந்த குளிர்ச்சியினால், பிம்பிள் உடைந்து பரவாமல் எளிதில் போய்விடும். 

சந்தன பவுடர்: இது பருக்களை போக்கும் ஒரு பாரம்பரிய வீட்டு மருந்துகளுள் ஒன்று. அதற்கு சந்தன பவுடரை, ரோஸ் வாட்டரில் கலந்து, பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், பிம்பிள் விரைவில் போய்விடும். 

எலுமிச்சை மசாஜ்: பிம்பிளைப் போக்குவதில் எலுமிச்சை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த பொருள் இருபாலருக்குமே நல்ல பலனைத் தரும். அதற்கு எலுமிச்சை துண்டு அல்லது சாற்றை பருக்கள் உள்ள இடத்தில் தடவி தேய்த்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேலும் இவ்வாறு செய்த பின், மறக்காமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும். 

இவையே ஆண்களின் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிம்பிளை போக்க செய்யப்படும் இயற்கை முறைகள். வேறு ஏதாவது முறைகள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: