ரியாத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் 54 வயதுடைய பியல் ரத்னபால என்ற இலங்கையர் 29 வயதுடைய சயிம் என்ற மொரக்கோன் நாட்டு பெண்ணை திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக ரியாத்தில் வாழ்ந்து வந்துள்ளார். குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ரத்னபால தனது மொரக்கோன் நாட்டு மனைவியிடம் கத்தியால் பல தடவைகள் குத்து வாங்கி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் மனைவி மேற்கொண்ட கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரத்னபால மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, ஞாபக மறதி ஏற்பட்ட நிலையில் தற்போது ரியாத் இலங்கை தூதரக பாதுகாப்பில் உள்ளார். சில நிமிடங்கள் மாத்திரம் ஞாபகத்தில் வைத்துள்ள ரத்னபால, கேள்விகள் கேட்டால் அதற்கு பதில் கூற பல நிமிடங்கள் மறந்துவிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்து ரியாத் போலீஸ்ஸார் விசாரித்த போது தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்தார்கள் , தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாதென கூறியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவி தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது எனவும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரத்னபால குறிப்பிடுவதாக ரியாத் இலங்கை தூதரக அதிகாரி அநுர முத்துமால தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறுவது படி சட்டம் செயற்படாதென முத்துமால தெரிவித்துள்ளார். விவாகரத்து செய்ய வேண்டுமானால் தனக்கு 100,000 சவுதி ரியால் நட்டஈடாக வழங்க வேண்டும் என மொரக்கோன் மனைவியுடன் ரத்னபால ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டுள்ளதாக சவுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. |
மனைவியிடம் அடிவாங்கிய இலங்கை வாலிபர் : ஞாபக மறதியால் சவுதியில் அவதி!!
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail