பிணங்களுடன் உடலுறவுகொள்ளும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை ஆராயும் எகிப்திய பாராளுமன்றம்



எகிப்து நாட்டு ஆண்கள் உயிரிழந்த தமது மனைவியோடு உடலுறவுகொள்ள அனுமதியளிக்கும் சட்டமூலமொன்றினை அந்நாட்டு பாராளுமன்றம் ஆராயவுள்ளது.
மனைவி உயிரிழந்த பின்னர் சுமார் 6 மணிநேரம் வரை அவருடன் உறவுகொள்ள இச்சட்டமூலம் இடமளிக்கின்றது.

மேற்படி சர்ச்சைக்குரிய செய்தி  மொராக்கோ நாட்டு மதகுருவான செம்சாமி அப்தல்பாரியால் கடந்த வருடம் விவாதிக்கப்பட்டது.

சில மதங்கள் இதனை அனுமதிப்பதாகவும், இறப்பிற்கு பின்னரும் திருமணங்கள் செல்லுபடியாகுமெனவும் அப்தல்பாரி தெரிவித்திருந்தார்.

எனினும் பல சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, இது அழிவிற்கு வித்திடுமெனவும் தெரிவித்திருந்தனர்.

எகிப்து நாட்டு பாரளுமன்றத்தில் இதனைப் போன்ற சில சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் விரைவில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பெண்ணின் திருமண வயதை 14 ஆகக் குறைத்தல், பெண்கள் விவாகரத்துப்பெறுவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்குதல், பெண் உறுப்பு சிதை (Female genital mutilation) ப்பினைக் கட்டாயமாக்குதல் போன்றவையே அவை ஆகும்.

மேற்படி சட்டமூலங்களை நிறைவேற்ற வேண்டாம் என அந்நாட்டு மாதர்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: