காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு மீண்டும் 10 மாதங்களுக்கு பின்பு மே 16ம் திகதி விசாரணைக்கு வருகிறது. |
| கடந்த 2010ம் வருடம் காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் தேவநாதன், கோவில் கருவறையில் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். இவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சம்பந்தப்பட்ட 4 பெண்களிடம் போலிஸ் விசாரணை நடத்தியது. அவர்கள் அர்ச்சகர் தேவநாதன் மயக்க மருந்து தடவப்பட்ட சாக்லேட் கொடுத்து தங்களிடத்தில் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாகவும் இதை செல்போனில் படமெடுத்து மிரட்டி வந்ததாகவும் புகார் கொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் நீதிமன்றம், தேவநாதன் இனி எந்தக் கோயிலிலும் அர்ச்சணை செய்யக்கூடாதென தீர்ப்பளித்தது. பின்னதாக தேவநாதனும் பிணையில் வெளியே வந்தார். தற்போது இவ்வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீண்ட இடைவேளிக்குப்பின்பு, அர்ச்சகர் தேவநாதனின் வழக்கு மே 16ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. |
மீண்டும் விசாரணைக்கு வரும் காஞ்சிபுர செக்ஸ் அர்ச்சகரின் வழக்கு
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail