எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? என்பதை மனதில்கொண்டு கலிபோர்னியாவிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த கான்செப்ட் கார்தான் லேமினா.டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நடந்த ஷெல் ஈக்கோ மாரத்தான் போட்டியில் லேமினா அறிமுகம் செய்யப்பட்டது. லிட்டருக்கு 155 கிமீ தூரம் செல்லும் என்பதே லேமினாவை அனைவரும் சுற்றி சுற்றி வந்ததற்கு காரணம்.
ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த காரில் ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கான்செப்ட் காரான இது மணிக்கு அதிகபட்சம் 19 கிமீ செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக மைலேஜ் கொடுப்பதற்காக எடை குறைந்த பொருட்களை கொண்டும், அதிக ஏரோடைனமிக்ஸ் இருக்குமாறும் இந்த காரை வடிவமைத்துள்ளனர்.
இந்த கார் தவிர அமெரிக்காவிலுள்ள 1000 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் தங்களது விதவிதமான கான்செப்ட் கார்களை சோதனை நடத்தி காண்பித்து அசத்தினர்.