இந்தியாவிலிருந்து பாசுமதி ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு சீனா அனுமதியளித்துள்ளது. |
| இது குறித்து சீனாவிற்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்திய பாசுமதி அரிசி இறக்குமதி செய்ய சீனா அனுமதியளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் 1.3 பில்லியன் மக்களுக்கு 4.5 மில்லியன் தொன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்ய உள்ளதால் சீன சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஏற்கனவே சீனா, பாசுமதி அரிசி உட்பட பல்வேறு விவசாய பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்வது மற்றும் காப்பகங்களில் பூச்சிகளிடமிருந்து போதுமான பாதுகாப்பு வசதி பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
இந்தியாவிலிருந்து பாசுமதி ரக அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail