19 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் பலியானவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு கி.மீ நீளத்துக்கு 80 அடி உயரத்துக்கு பனித் துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. பனிப் பாறையில் சிக்கியுள்ள சடலங்களை மீட்கும் பணியில் மோப்ப நாய்களும், இயந்திரங்களும், 200க்கும் அதிகமான வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி மீட்புப் பணிகள் நடக்கும் இடத்தை நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் இராணுவ தளபதி அஷ்பக் பெர்வேஸ் கயானியும் இருந்தார். ![]() ![]() ![]() ![]() ![]() |
பனிச்சரிவில் புதையுண்ட வீரர்களை மீட்கும் பணி தீவிரம்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




