சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மஹிந்திரா ரேவா எலக்ட்ரிக் கார் தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட புதிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா ரேவா நிறுவனம் வடிவமைத்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் கார் பெரும் ஆவலைத் தூண்டியது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ பயணம், புதிய வசதிகளுடன் ரேவா என்எக்ஸ்ஆர் கார் விற்பனைக்கு வர இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இந்த காரை தற்போது ரேவா நிறுவனம் தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த காரை விற்பனைக்கு கொணடு வர மஹிந்திரா ரேவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் லீட் ஆசிட் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி மாடல்களில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.