சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. |
| இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: பகத் சிங் நூற்றாண்டு விழாவையொட்டி, வெளியிடப்படவுள்ள ஐந்து ரூபாய் நாணயத்தின் ஒரு புறத்தில், பகத் சிங் உருவமும் மறுபுறத்தின் வலதுபுறத்தில் “ஷாஹித் பகத் சிங் நூற்றாண்டு விழா” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். உருவப் படத்தின் கீழே, 1907-2007 என்ற சர்வதேச எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நாணயம், இந்திய நாணயச் சட்டம் 1906ன்படி தொடர்ந்து செல்லத்தக்கது என்று தெரிவித்துள்ளது. ![]() ![]() |
பகத் சிங்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail

