இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) இந்தியத் தொழிநுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக ராடார் செயற்கைகோள் ஒன்றை தயாரித்துள்ளது. |
| 1,858 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-1 என பெயரிடப்பட்டுள்ளது. ரிசாட்-1 செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி.சி 19 ரொக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டா சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும் 26ம் திகதி அதிகாலை 5.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இதற்கான 71 மணி நேரம் கவுன்டவுன் நேற்று காலை 6.47 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்திய வேளாண்மைக்கு உதவக்கூடியது: ரிசாட்-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 536 கிலோ மீற்றர் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் கடந்த 20ம் திகதியே விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால், ரிசாட்-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் தேதியை இஸ்ரோ மாற்றியது. ரிசாட்-1 செயற்கைகோள் வேளாண்மை, நீர்வள நிர்வாகம் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இச்செயற்கைக்கோள் இரவு, பகல் என எந்த காலநிலையானாலும், மேகம் மூட்டமாக இருந்தாலும் பூமியின் நிலப்பரப்பை துல்லியமாக படம் படித்து அனுப்பும் திறன் கொண்டது. |
வரும் 26ம் திகதி விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைகோள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail