ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் காசூனோ நகரில் தனியார் நிர்வாகத்தின் கீழ் மிருககாட்சி சாலை உள்ளது. இங்கு 30-க்கு மேற்பட்ட கரடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கரடிகளுக்கு உணவு வழங்குவதற்காக 60 மற்றும் 70 வயதுடைய 2 பெண் ஊழியர்கள் சென்றனர். அப்போது 6 கரடிகள் திடீரென்று வேலியை தாண்டி குதித்து 2 பெண்களையும் கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிவிட்டன. இதில் 2 பெண்களும் அதே இடத்தில் இறந்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மற்ற ஊழியர்கள் 2 பெண்களும் இறந்து கிடப்பதைக் கண்டு போலிஸிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்பு போலிசாரும், வேட்டையாடுபவர்களும் விரைந்து வந்து தப்பி ஓடிய கரடிகளை பிடிக்க முயன்றனர். மேலும் அது பயன் அளிக்காமல் போகவே 6 கரடிகளையும் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மிருககாட்சி சாலை நிர்வாகத்தின் பாதுகாப்பு குளறுபடி காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() |




