இந்தியாவின் தேசிய பானமாகிறது தேநீர்





இந்தியாவில் பாமரர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேநீர்(டீ) இருந்து வருகிறது.
அந்த வகையில் நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேநீர் இந்தியாவின் தேசிய பானமாகிறது. இந்த தகவலை மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா தெரிவித்தார்.
அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்க பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர், அசாமில் முதன் முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212-ம் ஆண்டு பிறந்த நாளான அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ந் திகதி முதல் தேநீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகும் என்றார்.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தேயிலை தொழிலில் பெருமளவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்று இருப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: