ஜனாதிபதி தேர்தல்: சோனியாவை பிரதமராக விடாமல் தடுத்த அப்துல் கலாமை காங் ஏற்குமா?

Abdul Kalam டெல்லி:  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் ராஷ்ட்ரபதி பவனுக்கு திரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவதையடுத்து விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராகக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் விரும்புகின்றனர்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் அரசியல் தொடர்பில்லாத ஒருவரே குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ. சங்மாவை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசியவதா காங்கிரஸ் அறிவிக்கப் போகிறதாமே என்று பவாரிடம் கேட்டதற்கு, எங்களுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை. எங்களுக்கு வெறும் 16 எம்.பி.க்கள் தான் இருக்கிறார்கள். அரசியல் தலைவர் அல்லாத ஒருவரே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறினார்.

இந்நிலையில் காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியை குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சாம் பிட்ராடோ, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் ஆகியோரில் யாரையாவது காங்கிரஸ் பரிதுரைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வர விடாமல் தடுத்தவர் என்பதால் தான் கலாமை காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது. ஆனால், இப்போது அனைத்துத் தரப்பினரும் நெருக்கடி தருவதால், காங்கிரஸ் முழிக்கிறது.

அதே நேரத்தில் கலாம் தவிர்த்த, எதிர்க் கட்சிகள் சொல்லும் வேறு ஒரு பொது வேட்பாளரை ஏற்க காங்கிரஸ் தயாராகவே இருக்கும் என்று தெரிகிறது. இதனால் மக்களவை சபாநாயகர் மீரா குமாரின் பெயரையும் காங்கிரஸ் சுற்றுக்கு விட்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: