தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே கோடை ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில், தினந்தோறும் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்று திருச்சியில் தான் மிக அதிகபட்சமாக 106 டிகிரியும், வேலூர், மதுரை, பாளையங்கோட்டையில் சொல்லி வைத்தது மாதிரி ஒரே அளவாக 103.1 டிகிரி வெயிலும், சென்னை, புதுச்சேரியில் 94 டிகிரி வெயிலும் கொளுத்தியது.
சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வெயிலோடு அனல் காற்றும் சேர்ந்து தாக்குவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந் நிலையில் அடுத்த மாதம் வெயிலின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்ற 'நல்ல செய்தியை' சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வழக்கமான கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மே மாதம் இது மேலும் அதிகரிக்கும். இப்போதைக்கு மழை வாய்ப்பு குறைவு. தென் மேற்கு பருவமழை அடுத்த மாத இறுதியில் தொடங்கும். அதுவரை வெயில் பேயாட்டம் போடும் என்கிறது வானிலை