தமிழ்நாடு கீழக்கரையைச் சேர்ந்த செய்யது அபுதாகிர்(109) என்ற முதியவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்க வேண்டும் என்று அவ்வூர் மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேரூராட்சியைச் சேர்ந்த செய்யது அபுதாகிர், அவ்வூர் மீன் சந்தையில் மீன்களை சுத்தப்படுத்தும் வேலை பார்த்து வருகிறார். ![]() தன்னுடைய வயது முதிர்விலும் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார். மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியை பேரம் பேசாமல் பெற்றுக்கொள்கிறார். இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும்போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்த முதிய வயதிலும் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் இருக்கும் ஈடுபாடு தான் என்று அவ்வூர் மக்கள் புகழ்கின்றனர். இது குறித்து சிறுதொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாளர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறியதாவது, ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பான செயற்களுக்காக பல்வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் 100 ஆண்டுகளைக் கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இவருக்கு றோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
கீழக்கரையைச் சேர்ந்த செய்யது அபுதாகிர் 109 வயதிலும் மீன்வெட்டி சம்பாதிக்கும் இளைஞர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
