6 காலுடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக 4 கால்கள் அகற்றம்




பாகிஸ்தானில் 6 காலுடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் 4 கால்கள் அகற்றப்பட்டன.
பாகிஸ்தானை சேர்ந்த எக்ஸ்ரே டெக்னீசியன் இம்ரான் ஷேக்கின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு 6 கால்கள் இருந்தன.
இதனையடுத்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மற்ற 4 கால்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அந்த குழந்தை கராச்சி மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
பிரபல மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அறுவைசிகிச்சையில் ஈடுபட்டது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சிகிச்சையில் குழந்தைக்கு 4 கால்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.
தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. மேலும் அறுவைசிகிச்சைக்கு உண்டான அனைத்து செலவையும் பாகிஸ்தான் அரசே ஏற்றுக்கொண்டது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: