ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டாலர்


ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயில் பண வீக்கத்தை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
அப்போது அந்நாட்டின் டாலர் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது அந்த நாட்டின் பணவீக்கம் 231 மில்லியன் சதவீதமாக உள்ளது.
ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டாலர், இரண்டு அமெரிக்க டாலருக்கு சமமானது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அந்நாடு 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் டாலர்களை அறிமுகப்படுத்தியது.
ஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டாலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன் டாலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதன் சர்வதேச மதிப்பு, ஒரு அமெரிக்க டாலர் தான்.
மூன்று முட்டைகள் வாங்க 100 பில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். அந்நாட்டில் பணத்தின் மதிப்பு சரிந்து கொண்டே போனதால், பெரும்பாலான இடங்களில் ஜிம்பாப்வே நாணயங்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான இடங்களில் அமெரிக்க டாலர் புழக்கத்தில் இருந்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. தற்போது இந்த டாலருக்கு சில்லரை கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலகில் ஐந்துக்கும் அதிகமான நாடுகள் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துகின்றன.
ஆனால் இந்த நாடுகள் உள்ளூர் நாணயங்களை பயன்படுத்துகின்றன. ஈக்வடார் நாட்டிலும் இதே போன்ற பிரச்னை தான். அங்கும் அமெரிக்க டாலரைத் தான் பயன்படுத்துகின்றனர்.
எனினும் அவர்கள் உள்நாட்டு நாணயத்தை தாராளமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளதால் சில்லரைக்கு பிரச்னையில்லை. ஆனால் ஜிம்பாப்வேயில் உள்ளூர் நாணயம் கிடையாது. தென் ஆப்ரிக்க நாணயங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
அதுவும் மிகவும் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது.எந்த கடைக்குச் சென்றாலும் சில்லரை இல்லை என்ற புராணம் தான் ஒலிக்கிறது. சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க, கடைகளில் சாக்லெட், பேனா, சிகரெட், காய்கறி கடைகளில் கூடுதலாக தக்காளி, வெங்காயம் போன்றவை கொடுக்கப்படுகின்றன.
மளிகை கடையில் பொருட்கள் வாங்கினால், ஸ்டீல் டம்ளரை சில்லரைக்கு பதில் தருகின்றனர். பெரிய வணிக வளாகங்களில் சில்லரைக்கு பதில் கடன் சீட்டு தருகின்றனர். இந்த பிரச்னையைத் தீர்க்க புதுப் புது வழிகளை கையாண்டும் ஜிம்பாப்வே அரசால் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: