வாஷிங்டன்: பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்ததை முதலில் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் அமெரிக்காவுக்குத் தகவல் கொடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வடக்கே உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை ஓராண்டுக்கு முன்பு அமெரிக்க கமாண்டோ படைவீரர்கள் அதிரடி நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான் அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உலகின் எந்த பகுதியில் அல்குவைதா தாக்குதல் நடத்தினாலும் எங்களது உதவியுடன்தான் நடக்கும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு ஒசாமாவின் தூதராக செயல்பட்ட அபு அகமது பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் கொடுத்தது என்றும் கூறியுள்ளார். அபோதாபாத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது இது உண்மை என உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர். அபு அகமதுவின் செல்போன் எண் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.