சென்னையில் முதல் வால்வோ கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் அவென்ஸ்யூ வணிக வளாகத்தில் அமைந்துள்ள புதிய வால்வோ கார் ஷோரூம் இன்று திறக்கப்பட்டுள்ளது.சென்னையில் சொகுசு கார் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஷோரூம் திறந்து கார்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஸ்வீடனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் வால்வோவும் சென்னையில் தனது முதல் கார் ஷோரூமை இன்று திறந்தது.
சென்னையின் புதிய அடையாளச் சின்னமாக மாறிவிட்ட எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இந்த 350 சதர அடி பரப்பளவில் இந்த புதிய கார் ஷோரூம் அமைந்துள்ளது.
அர்டெமிஸ் கார்ஸ் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய கார் ஷோரூமில் வால்வோ இந்தியாவில் விற்பனை செய்யும் கார் மாடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஷோரூமை திறந்து வைத்து பேசிய வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க் கூறியதாவது:
"சென்னையில் எங்களுக்கு பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அனைத்து நகரங்களிலும் ஷோரூம் திறந்து வருகிறோம்.
சென்னை மக்களை வெகுவாக கவர்ந்துவிட்ட எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஷோரூம் திறந்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. இதன்மூலம், வாடிக்கையாளர்களை எளிதாக நெருங்க முடியும் என்று நம்புகிறோம்," என்றார்.