| மேற்குவங்க தலைநகர் கொல்கட்டாவிலிருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் பர்த்வான் மாவட்டம் பும்சோர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஜியா. இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு மோனிருல் ஹக் என்ற 13 வயது மகன் இருந்தான். இவன் பாம்சோல் உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்தான். மேலும் அதே கிராமத்தில் வசிக்கும் அமீருல்லா என்பவரிடம் டியூசனும் படித்து வந்தான். இந்நிலையில் இம்மாதம் 14ம் திகதி காலை டியூசனுக்கு சென்ற மோனிருல் ஹக், ஆசிரியரின் அலைபேசி ஒன்றை திருடியுள்ளான். பின்பு, அதை தன் நண்பன் ஒருவனிடம் ரூ.100க்கு விற்றுள்ளான். தன் அலைபேசியை மோனிருல் தான் திருடினான் என்று அறிந்த ஆசிரியர் அமீருல்லா, மாணவனின் தாய் ஆஷாவிடம் புகார் கூறினார். ஆஷா, அவனுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் ஒரு அறைக்குள் சிறை வைத்தார். பின்பு தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்ததும் இந்த திருட்டு சம்பவத்தை தெரிவித்தார். அவர் மூங்கில் குச்சியால் பலமாக அடிக்க ஏற்கனவே பசி மயக்கத்தில் மோனிருல் மயங்கி விழுந்தான். பின்பு அவனை பர்த்வான் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவனை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கொல்கட்டா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
ஆசிரியர் அலைபேசியை திருடியதால் மாணவன் அடித்துக் கொலை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail