காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை




மகாத்மா காந்தியின் ரத்தம் படித்த மண் மற்றும் புற்களை ஆற்றில் கரைத்து விடுங்கள் என்று ஏலம் எடுத்தவரிடம் காந்திஜியின் பேத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மற்றும் புற்கள் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது.
கண்ணாடியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த இதை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் ரூ.8.2 இலட்சம் தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மண் மற்றும் புற்களை உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள ஆறு அல்லது கடலில் கரைத்து விட வேண்டும் என்று காந்திஜியின் பேத்தி தாரா காந்தி பட்டாசார்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர காந்திஜி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை போன்றவையும் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டன. இறுதியில் கண்ணாடி ரூ.28 இலட்சத்துக்கும் ராட்டை ரூ.21 இலட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: