அக்னி ஏவுகணை பரிசோதனையை போட்டியாக நினைக்காமல் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது. |
இன்று காலை அக்னி ஏவுகணை-5 பரிசோதனை வெற்றி பெற்றது. இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் வல்லமை வாய்ந்தது. இந்த ஏவுகணை வெற்றி குறித்து சீனா கருத்து வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் எங்களுக்கு எவ்விதமான போட்டியும் இல்லை. இந்த ஏவுகணை பரிசோதனையை நாங்கள் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இன்று சீனா வெளியிட்டுள்ள இந்த செய்தி பிரிக்ஸ் மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் லியூ வியூமின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
அக்னி ஏவுகணை வெற்றி எங்களுக்கு எச்சரிக்கை: சீனா
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail