தீவிரவாதத்திற்கு எதிராகவும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் இந்திய,அமெரிக்க நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. |
| ஒரு நாள் நடைபெறும் இச்சந்திப்பில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் அமெரிக்க உள்துறை துணை செயலாளர் ஜானி லூட் கலந்து கொள்கிறார்கள். இச்சந்திப்பில் தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கு வரும் நிதி, பிடிப்பட்ட குற்றவாளிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்வது, உளவுத் துறையின் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்வது போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தகம், கள்ள நோட்டு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துதல், முறையற்ற முதலீடு போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
தீவிரவாதத்திற்கு எதிராக இணையும் இந்தியா, அமெரிக்கா
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail