சேது சமுத்திர திட்டத்தில் ராமருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த விஷமிகள் முயற்சி: கருணாநிதி புகார்




சேது சமுத்திரத் திட்டத்தை சீர்குலைப்பதற்கு ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகின்றனர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் கருணாநிதி பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மீது அக்கறையுள்ளவர்கள் பகுத்தறிவாளராக இருந்தாலும், சாதாரண நபராக இருந்தாலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவே விரும்புவார்கள்.
ஆனால் இத்திட்டத்தை சீர்குலைப்பதற்காக ராமருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பிறகு சேது பாலத்தை தேசியச் சின்னம் என்று அறிவித்தால் என்ன ஆகி விடும்? எனவும் அவர்களுக்கு கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சேது சமுத்திர திட்டத்தை சீர்குலைக்கும் விஷமிகளுக்கு மத்திய அரசு துணை போகாமல் இருந்து இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: