
ஜெர்மனி - பென்ஸ் சிஎல்எஸ்
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய கேந்திரமாக திகழும் ஜெர்மனியில் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் காரை போலீசார் ஆஸ்தான வாகனமாக பயன்படுத்துகின்றனர். பென்ஸ் கார்களில் சிஎல்எஸ் பெர்ஃபார்மென்ஸுக்கு பெயர் போனது. போலீசாருக்காக பல்வேறு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வெறும் 6.6 வினாடியில் 100 கிமீ வேகத்தை எட்டவல்லது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும்.

டெக்சாஸ்(அமெரிக்கா)- செவர்லே கேமரோ
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டின் கமாரோதான் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாண போலீசாரின் ஆஸ்தான வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

புளோரிடா(அமெரிக்கா)- டோட்ஜ் சேலஞ்சர்
அமெரிக்காவிலுள்ள புளோரிடா போலீசாரின் ஆஸ்தான வாகனமாக டோட்ஜ் சேலஞ்சர் பயன்படுத்தப்படுகிறது.இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 270 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

ஜப்பான் - ஹோண்டா என்எஸ்எக்ஸ்
ஜப்பானில் அதிவேக சாலைகளுக்கும், புயல்வேக கார்களுக்கும் புகழ்பெற்றவை. இந்த சாலைகளில் ரோந்து செல்வதற்கு ஏற்றதாக ஹோண்டா என்எஸ்எக்ஸ் காரை அந்நாட்டு போலீசார் பயன்படுத்துகின்றனர். வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 5 வினாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும் என்பதோடு, அதிகபட்சம் மணிக்கு 307 கிமீ வரை சீறிப்பாய்ந்து செல்லும்.

அபுதாபி- நிசான் ஜிடி-ஆர்
உலக அளவில் மிகவும் பிரபலமான நிசான் ஜிடி-ஆர். இந்த காரைத்தான் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபி போலீசார் பயன்படுத்துகின்றனர். இந்த கார் மணிக்கு 313 கிமீ வரை செல்லும் திறன் வாய்ந்தது.

பிரான்ஸ்- பீஜோ ஸ்போர்ட்ஸ் ஜிடி
பிரான்ஸ் நெடுஞ்சாலை ரோந்து பணிகளுக்கு பீஜோவின் ஸ்போர்ட்ஸ் ஜிடி காரையே அந்நாட்டு போலீசார் ஆஸ்தான வாகனமாக பயன்படுத்துகின்றனர். 8.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டவல்ல இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்லும்
.

ஜெர்மனி - போர்ஷே 911
ஜெர்மனியில் பென்ஸ் சிஎல்எஸ் கார் தவிர நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளில் போர்ஷே 911 காரையும் போலீசார் பயன்படுத்துகின்றனர். 4.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டவல்ல இந்த கார் மணிக்கு 285 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

நெதர்லாந்து- ஸ்பைக்கர் சி8
நெதர்லாந்து போலீசார் ஸ்பைக்கர் சி8 காரை ஆஸ்தான வாகனமாக பயன்படுத்துகின்றனர். அதவும் டாப் இல்லாத கன்வெர்ட்டிபிள் மாடலான இந்த காரில் 400 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 300கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

இந்தியா- மஹிந்திரா எம்எம் 540
ஜீப் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆஸ்தான வாகனமாக மஹிந்திரா ஜீப்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக தற்போது மஹிந்திரா பொலிரோ ஆஸ்தான வாகனமாக மாறியுள்ளது.