உலக ஆட்டோமொபைல் பிரியர்களின் கவனம் டெட்ராய்ட் மீதுள்ள நிலையில், கனடாவில் நடந்து வரும் ஆட்டோ ஷோ ஒன்றில் புதிய கான்செப்ட் மாடல் கார் ஒன்றை ஹோண்டா பார்வைக்கு வைத்துள்ளது. கியர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் கார்தான் அடுத்த தலைமுறை ஜாஸ் காராக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. நகர்ப்புற இளைஞர்களை கவரும் வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகளை கொண்டிருக்கும். மிக மென்மையான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் பிற விபரங்களை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், அடுத்த தலைமுறை ஜாஸ் காராக பார்க்கப்படுவதால் இந்தியாவில் அறிமுகமாவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இந்த கான்செப்ட் காரின் பட தொகுப்பு.


