சென்னையை அதிர வைக்கும் கள்ள நோட்டு கும்பல்!

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்டு வருகின்றனர். இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனான ரபீக் சென்னை கொடுங்கையூரில் பதுங்கியிருந்த போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி இருக்கிறான். அவனை போலீசர் வலைவீசித் தேடி வருகின்றனர். தொடர் கைதுகள் சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்றதாக அப்துல் இஸ்மாயில், வசீம்ராஜா, அப்துல் முனாப் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சிக்கினர் அவர்களிடம் இருந்து ரூ. 5.03 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் ரூ.4800 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு தாம்பரம் பரத்வாஜ் தெருவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சுற்றித் திரிந்த ஒருவரை சேலையூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரின் பெயர் அப்துல்ஹமீது என்றும் மேற்கு வங்காள மாநிலம் முசிரிபாத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 24 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து அப்துல் ஹமீது உள்பட 5 பேர் ஒரு குழுவாக சென்னை வந்துள்ளனர். அவர்களில் 4 பேர் கிண்டியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களில் உஜ்மால் என்பவனை இன்று போலீசார் கைது செய்தனர். இவனும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். கும்பல் தலைவன் ரபீக் பிடிபட்ட இந்த கள்ள நோட்டு கும்பல் தலைவனாக செயல்பட்டவன் பெயர் முமது ரபீக். இவன் கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தான். அவனை பிடிப்பதற்காக போலீசார் அங்கு சென்றனர். ஆனால் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். அவனது வீட்டில் கொல்கத்தா லாட்ஜூகளில் தங்கி இருந்ததற்கான ரசீதுகள் சிக்கியுள்ளன. போலீசின் பிடியில் இருந்து காயங்களுடன் தப்பிய ரபீக் விரைவில் போலீசில் சிக்குவான் என தெரிகிறது. இந்த கள்ளநோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு வங்கதேசத்துக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு தீவிரவாத குழுக்கள் மூலம் இந்தியாவுக்குள் அவை புழக்கத்தில் விடப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் ரபீக்குக்கு தீவிரவாதிகளிடன் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கள்ளநோட்டுக் கும்பல் தலைவன் ரபீக் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரக் கூடும் என்று போலீசார் கூறுகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: