பீட்டாவுக்காக ஆடைகளைத் துறந்த 10 பிரபலங்கள்


Celebs Who Posed Nude For Petaபெங்களூர்: விலங்குகளை பாதுகாக்க போராடும் பீட்டா அமைப்புக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த 10 பிரபலங்களைப் பார்க்கலாம். விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தும் பீட்டா அமைப்புக்காக 2003ம் ஆண்டில் நடிகையும், மாடலுமான பமீலா ஆன்டர்சன் நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பமீலா துணிச்சலானவர் தான் என்றனர். ஆனால் அதன் பிறகு பல பிரபலங்கள் இந்த அமைப்புக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். பிக்ஸ் பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்ட ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி அண்மையில் பீட்டாவுக்காக ஆடைகளைத் துறந்தார். பீட்டாவுக்காக போஸ் கொடுப்பவர்கள் விலங்குகளை வதைக்காதீர்கள், சைவ உணவையே உண்ணுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு பீட்டாவுக்காக நிர்வாண போஸ் கொடுத்த 10 பிரபலங்களைப் பார்ப்போம்.

சப்னா பாவ்னானி



 பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்டான சப்னா முதுகை காட்டிக் கொண்டபடி அமர்ந்துள்ளார்.

பமீலா ஆன்டர்சன்




விலங்குகளுக்கும் மனிதர்களைப் போன்று உடல் உறுப்புகள் உள்ளது என்பதை மக்களுக்கு புரிய வைக்க முயன்றார் பமீலா.

பாட்ரிக் ரிப்சேட்டர் 



ஸ்வீடனைச் சேர்ந்த சூப்பர் மாடலான பாட்ரிக் ரிப்சேட்டர் விலங்குளை சங்கிலியால் கட்டிப்போட்டு வதைக்காதீர்கள் என்பதை புரிய வைத்துள்ளார்.

வென்டி வில்லியம்ஸ்



 நடிகையும், எழுத்தாளருமான வென்டி வில்லியம்ஸ் விலங்குகளின் தோலினால் ஆன உடையை அணிவதை விட நிர்வாணமாக இருப்பேன் என்று தெரிவித்து போஸ் கொடுத்துள்ளார்.

ஜாஸ் ஸ்டோன்

.

 இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான ஜாஸ் ஸ்டோன் ராணியின் பாதுகாவலர்கள் விலங்கு தோலால் செய்யப்பட்ட தொப்பியை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரடி பொம்மையை பிடித்துக் கொண்டு அமர்ந்துள்ளார்.

கிறிஸ்டன் ஜான்ஸ்டன் 



டிவி மற்றும் சினிமா நடிகையான கிறிஸ்டன் ஜான்ஸ்டன் குதிரை வண்டிகள் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி போஸ் கொடுத்துள்ளார்.

கிறிஸ்டியன் செரடோஸ்



 ட்வைலைட் படங்களில் நடித்துள்ள கிறிஸ்டியன் விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ் கொடுத்துள்ளார்.

ஒலிவியா மன் 




அமெரிக்க நடிகையான ஒலிவியா மன் சர்க்கஸுக்கு போகாதீர்கள், யானைகளை சுதந்திரமாக சுற்றித் திரிய விடுங்கள் என்று வலியுறுத்தி ஆடைகளைத் துறந்துள்ளார்.

ஈவ்லின் லொசாடா 



விலங்குத் தோலினால் ஆன ஆடையை அணிவதை விட நிர்வாணமாக இருப்பது மேல் என்கிறார் டிவி பிரபலமான ஈவிலின்.

மேகி க்யூ 



நடிகையும், மாடலுமான மேகி க்யூ சைவத்திற்கு மாறுமாறு மக்களை வலியுறுத்தி மிளகாய் மீது படுத்து போஸ் கொடுத்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: