எம்.ஜி.ஆரின் ‘தாலுகா கனவு’ அதிரையில் நனவாகுமா !?




தாலுகா அலுவலகம் அமைய தகுதியுள்ள ஊரா அதிரை !?
ஏன் இல்லை ? வரலாற்றுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடைமடைப் பகுதியான அதிரை பண்டைய வணிக வியாபாரத்தில் சிறந்து விளங்கின. பெரும்பாலான வணிகர்கள் தேங்காய், மீன், நண்டு, கருவாடு, இறால் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யக் கூடிய ஊர்களில் இதுவும் ஒன்று என்பது தனிச்சிறப்பு.

இவ்வூரில் கஸ்டம்ஸ் அலுவலகம், வானொலி நிலையம், துறைமுகம், நூலகம், தமிழக அளவில் புகழ் பெற்ற கல்லூரி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், கடலோரப் காவல் படை அலுவலகம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கி, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இப்பகுதியை சுற்றி மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலி வயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை உட்பட்ட கிராமங்களில் சுமார் மூன்று லட்சம் வரை மக்கள் தொகையை கொண்ட பரந்த பகுதியாக இருக்கின்றது.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பகுதியில் ‘தாலுகா அலுவலகம்’ இல்லாதது பெறும் குறையாக இருக்கின்றன. அதிரையில் வசிக்கும் ஒருவர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆட்டோ, இரண்டு பஸ்கள் மாறி சுமார் 20 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அதிரைக்கே இந்த கதி என்றால் அதிரைப் பகுதியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கக் கூடியவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் !?

ஜாதி [ !? ], வருமான, இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கும், நலத்திட்ட உதவிகள் பெறவும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் பல வாரங்கள் நீண்ட தூரத்தில் இருக்கின்ற தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியதோடு மட்டுமல்லாமல் அங்கே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

தாலுகா அலுவலக வாசலில் டோக்கன் பெற காத்திருந்து வரிசையில் நிற்க வேண்டும். அந்த டோக்கனில் குறிப்பிடப்படும் நாட்களுக்கு பின்பு தான் நாம் அங்கே செல்ல வேண்டும். அன்றைய தினமும் நாள் முழுக்க காத்திருந்த பின்பே சான்று பெற முடியும்.

நீண்ட தூரத்தை கருத்தில் கொண்டு வேலை செல்லும் பொதுமக்களும், வயோதியர்களும், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சான்று பெறுவதற்காக தாங்கள் பணி புரிகின்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டே தாலுகா அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இந்த பணிக்காக சிலர் இடைத்தரகர்களிடம் தங்களின் பணத்தை இழப்பதும் உண்டு.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதற்காக அதிரையில் கடந்த 1981 ஆம் ஆண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேலத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டியிணை திறந்து வைப்பதற்காக காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிரை மாநகருக்கு வருகை புரிந்தார். அப்போது எம்ஜிஆர் அவர்கள் தனது சொற்பொழிவின் இடையே, விரைவில் அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்றப்படும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் விரைவில் நம் பகுதியில் வர இருக்கின்றதை எண்ணி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட கரஒலியை எழுப்பி அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அறிவிப்பு செய்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டன, எண்ணற்ற அரசியல் மாற்றங்கள், புதிய கட்சிகள், புதிய இயக்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என வந்துவிட்டாலும் அதிரை அதிரையாகவே இருக்கின்றன அதன் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியே [ மெய்யாலுமே பஸ்டாண்டு இல்லிங்க :) ] காணப்படுகின்றன.

எம்.ஜி.ஆர் அவர்களின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா !?

நன்றி : சேக்கனா M. நிஜாம்
http://nijampage.blogspot.in/2013/01/blog-post_16.html
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: