பொங்கல் பண்டிகையையொட்டி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகளை ஃபோர்டு அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் இந்த தள்ளுபடி சலுகையை பெறலாம்.
புதிய ஃபிகோ காருக்கு ரூ.25,500 தள்ளுபடியையும், கிளாசிக் செடான் காருக்கு ரூ.34,500 தள்ளுபடியையும் பெற முடியும். குளோபல் ஃபியஸ்ட்டா காருக்கு ரூ.72,000 தள்ளுபடியும், அதிகபட்சமாக எண்டெவர் எஸ்யூவிக்கு ரூ.81,000 தள்ளுபடியை ஃபோர்டு வழங்குகிறது.
"ஸ்டீல் தி டீல்" என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு இந்த தள்ளுபடி திட்டத்தின் மூலம் இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் விலையில் தள்ளுபடிகளை பெறலாம். இதுதவிர, 15ந் தேதி வரை கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்க நாணயத்தை பரிசாக பெறும் திட்டத்தையும் ஃபோர்டு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திராவிலுள்ள டீலர்களில் மட்டும் இந்த சலுகைகளை பெற முடியும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.