வால்பாறை பள்ளியில் தலைமை ஆசிரியர்-ஆசிரியை நிர்வாணமாக உல்லாசம்: இன்டர்நெட்டில் வீடியோ














கோவை: வால்பாறையில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறொரு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆபாச வீடியோவில் இருக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பிறகே சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி கூறுகையில்,

சோலையாறு எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன்(49) வேறு ஒரு ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கையில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றனர். இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில், சம்பந்தப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்வோம் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: