இந்தியாவில் கார் அசெம்பிளிங் ஆலை அமைக்கும் வால்வோ

இந்தியாவில் கார் ஒருங்கிணைப்பு ஆலையை அமைப்பதற்கான முயற்சிகளை வால்வோ துவங்கியிருக்கிறது. சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ, ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிக்கு நடுவில் உள்ளே புகுந்து விற்பனையில் பெரிய பங்களிப்பை பெற முடியாத நிலையில் வால்வோ இருக்கிறது. இறக்குமதி செய்து கார்களை விற்பனை செய்வதால் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒப்பிடும்போது வால்வோ கார்களின் விலை அதிகமிருக்கிறது. எனவே, சிறந்த தயாரிப்புகளை கைவசம் வைத்திருந்தும் வால்வோ தவித்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை சமாளித்து வேகமாக வளர்ந்து வரும் இந்திய சொகுசு மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெறும் வகையில் இந்தியாவில் புதிய கார் ஒருங்கிணைப்பு ஆலையை அமைக்க வால்வோ முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பர்க் தெரிவித்தார். இ ந்தியாவிலேயே கார் ஒருங்கிணைப்பு பணிகள் துவங்கும்போது வால்வோ கார்களின் விலை கணிசமாக குறையும். இதைவைத்து சந்தையில் எளிதாக போட்டிபோட முடியும். மேலும், நாட்டின் முக்கிய நகரங்களில் 13 புதிய கார் ஷோரூம்களை திறக்கவும் வால்வோ திட்டமிட்டுள்ளது. இந்த வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம் 2020ல் ஆண்டுக்கு 20,000 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வால்வோ இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: