உலகின் அதிவேக டாப்-10 சூப்பர் பைக்குகள்!


அதிவேக சூப்பர் பைக்குகளை தயாரிப்பதில் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. சுஸுகி, கவாஸாகி யமஹா, ஹோண்டா என ஜப்பானிய நிறுவனங்கள் ஒரு பக்கமும், பிஎம்டபிள்யூ மோட்டராடு, எம்வி அகஸ்ட்டா மற்றும் டுகாட்டி என ஐரோப்பிய நிறுவனங்கள் மறுபக்கமும் சூப்பர் பைக் மார்க்கெட்டில் மல்லு கட்டி வருகின்றன.
கண் இமைக்கும் நேரத்தில் கடந்து போகும் ஆற்றல் வாய்ந்த அதிவேக பைக்குகள் குறித்த அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் இருப்பது இயற்கையே. இந்த செய்தித் தொகுப்பில் உலகின் அதிவேக சூப்பர் பைக்குகள் குறித்த தகவல்களை காணலாம்.
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000

சுஸுகியின் பிரபலமான இந்த சூப்பர் பைக்கில் 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 285 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்

இந்த பைக்கை ஃபயர்பிளேடு என்றும் அழைக்கின்றனர். சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகள் மூலம் சிபிஆர் வரிசை பற்றி இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிமுகம் இருக்கிறது. சிபிஆர் வரிசையில் 998சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக் மணிக்கு அதிகபட்சம் 291 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

யமஹா ஒய்இசட்எப்-ஆர்1

சிறந்த கையாளுமை கொண்ட இந்த பைக்கில் 998 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 297 கிமீ வேகம் வரை செல்லும்.

கவாஸாகி நிஞ்சா இசட்இசட்ஆர் 1400

மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த பைக்கில் 1352சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 299கிமீ வேகத்தில் செல்லும்.

டுகாட்டி 1199 பனிகேல்

டுகாட்டி பைக்குகளுக்கு சர்வதேச அளவில் அதிக ரசிகர்கள் உண்டு. இந்த பைக்கில் 196 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1199 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்

டுகாட்டியின் நேரடி போட்டியாளர்தான் இந்த சூப்பர் பைக். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரிக் எவொலியூசன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்புகளை பெற்ற இந்த சூப்பர் பைக்கில் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 305கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

எம்வி அகஸ்ட்டா எஃப்3 தம்புரினி

அழகான சூப்பர் பைக்குகள் என வர்ணிக்கப்படும் எம்வி அகஸ்ட்டா பிராண்டின் எஃப்3 தம்புரினியின் வடிவமைப்பு அனைவரையும் கவரும். இந்த பைக்கில் 128 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 307 கிமீ.

எம்வி அகஸ்ட்டா எஃப்-4 ஆர்-312

உலகின் மிக அதிகவேக பைக்குகளில் சிலவற்றை கடைசி மூன்று ஸ்லைடரில் கொடுத்திருக்கிறோம். இதில், எம்வி அகஸ்ட்டா எஃப்4 ஆர்312 மாடல் மணிக்கு 314 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

சுஸுகி ஹயபுசா

சுஸுகியின் பிரபலமான இந்த பைக்கில் 162 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 320 கிமீ.

எம்டிடி டர்பைன் சூப்பர்பைக் ஒய்2கே

இந்த பைக்கில் சாதாரண எஞ்சினுக்கு பதிலாக ரோல்ஸ்ராய்ஸின் ஹெலிகாப்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 300 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மணிக்கு 370 கிமீ வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: