இடைவிடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த குண்டுப்பெண் மரணம்

அமெரிக்காவில் எப்போதும் சாப்பிட்டுகொண்டே இருந்த காரணத்தினால், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவின் மியாமியை சேர்ந்தவர் டாமினிக் லனாய்ஸ்(வயது 40). இவர் கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஏன் படுக்கையை விட்டுக் கூட எழுந்திரிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது எடை 283 கிலோ ஆகும்.
டாமினிக் முதலில் ஸ்லிம்மாகத் தான் இருந்துள்ளார். ஆனால் 16 வயதில் குழந்தையை பெற்றெடுத்தது முதல், டாமினிக்கின் உடல் எடை அதிகரித்து விட்டதாம். இப்படி படுக்கையிலேயே இருந்த டாமினிக்கை அவரது குழந்தைகள் தான் கவனித்துக் கொண்டனர்.
இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றுப் பகுதியை பெருமளவு குறைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார்.
இந்நிலையில் அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் ஒன்றை தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.
இவ்வளவு குண்டான ஒருவர் இருக்கிறார் என்பதே கடந்த 2010ஆம் ஆண்டு தான் ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி டாமினிக், தான் நினைத்தபடி அதிகளவு சாப்பிட்டதால் தான் பலியானாதாக தெரிவிக்கப்படுகிறது.




Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: