பாலியல் கொடுமைக்குள்ளான டெல்லி பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்


 Student Gang Raped On Delhi Bus Dies Singapore Hospital  சிங்கப்பூர்: டெல்லியில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, தான் வாழ வேண்டும், வாழ விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது வாழ்க்கை இன்று காலையில் முடிவுக்கு வந்து விடட்து. மாணவி மரணத்தைத் தழுவியபோது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இந்தியநேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார். அவரது உடல் உடனடியாக சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் உடல் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் அவரது உடல் இந்தியா கொண்டு வரப்படும். மாணவியின் மரணம் குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 13 நாட்களாக மாணவி உயிருக்குப் போராடி வந்தார். அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களும், பிரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன. டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. அப்பெண்ணுக்கு மூன்று பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருமுறை மாரடைப்பும் வந்தது. இதையடுத்தே அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி இப்பெண் தனது நண்பருடன் பஸ்சில் பயணித்தபோது ஒரு கும்பல் அப்பெண்ணை கொடூரமாக சிதைத்துத் தாக்கியது.அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அப்பெண்ணையும்,நண்பரையும் ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டுஅக்கும்பல் தப்பி விட்டது. அக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: