22 ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் வாழும் தம்பதியர்

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் மெடலின் நகரை சேர்ந்த மிகியல் ரெஸ்டிரபோ மரியா கார்சியா என்ற் தம்பதிகள் சொந்த வீடு இல்லாமல் கடந்த 22 ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் வசிக்கின்றனர்.
இவர்கள் வசித்து வந்த பாதாள சாக்கடை மெடலின் புறநகர் பகுதியில் ஆள்நடமாட்டமின்றி காணப்படும் இடமாகும்.
தனது வீட்டு வாசலில் கிறிஸ்துமஸ் மரம் கட்டிக் கொண்டிருந்த மிகியல் தனது அண்டர்கிரவுண்டு பங்களா பற்றி கூறுகையில், ஆரம்பத்தில் கூலி வேலைக்கு சென்று வந்த நான் துரதிர்ஷ்டவசமாக போதை பழக்கத்துக்கு அடிமையானதால் வேலையை இழந்தேன்.
சாப்பாடு இன்றியும், தங்க இடமின்றியும் தவித்த எங்களுக்கு மெடலின் நகரின் ஒரு ஓரத்தில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த பாதாள சாக்கடை. இந்த இடத்துக்கு பாதாள சாக்கடை தேவையில்லை என்பதால் அதிகாரிகள் இதை அடைத்துவிட்டு போனது எங்களுக்கு வசதியாகிவிட்டது.
இந்த ஒண்டுக்குடித்தன வீட்டில் கூடவே அவர்களோடு செல்ல நாய் பிளாக்கியும் இருக்கிறது. ஆக்கிரமிப்பு என்று கூறி எந்நேரத்திலும் அதிகாரிகள் எங்களை விரட்டியடிக்கலாம். 22 ஆண்டுகளாக அதுபோன்ற சம்பவம் நடக்காதது எங்கள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.










Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: