இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு மேல் முறையீடு செய்வதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லீம்கள் நன்றி கடன் படுவார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கை பேணி காப்பவர்கள் முஸ்லிம்கள். இப்படத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு வரும் வரை அமைதி காக்க கோரிக்கை:
விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்து மனித நேயமக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
விஸ்வரூபம் பற்றிய தீர்ப்பு இடைக்கால தீர்ப்பு தான். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனு குறித்த தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.