போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்!

டெல்லி மாநகர மக்களிடம் போலீஸாரின் அணுகு முறை உணர்வு பூர்வமாக இல்லை. இதனால் போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்'' என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தால் போலீஸார் தங்களை தொந்தரவு செய்வார்கள் என்று பொது மக்கள் அஞ்சுகின்றனர். போலீஸார் பண்புள்ளவர்களாக செயல்பட வேண்டும். தங்களது நடவடிக்கைகளை போலீஸார் மாற்றிக் கொள்ள வேண்டும். போலீஸாருக்கு அளிக்கப்படும் பயிற்சியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், தில்லி துணை நிலை ஆளுநர், தில்லி காவல்துறை ஆணையரிடம் தெரிவித்திருக்கிறேன். தில்லி போலீஸார் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை குறைத்துவிட்டு பொதுமக்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

சிந்திக்கவும்: இந்திய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மாநிலத்தின் முதல்வர் பகிரங்கமாக தனது மாநிலத்தின் போலீஸ் குறித்து கருத்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.


கருணாநிதியும் கோவை கலவரமும்: கருணாநிதி முதல்வராக இருக்கும் பொழுது காவல்துறையின் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் விட்டதால்தான் கோயம்புத்தூர் கலவரமே நடந்தது. கலவரத்தை கட்டுபடுத்த முடியாமல் போன கருணாநிதி, குறைந்தபட்சம் கலவரத்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். ஆனால் அதை விட்டு அவர்களுக்கு பதவி உயர்வும், பதக்கமும் அணிவித்து கவுரவித்தார்.

நாம் முதல்வராக இருக்கும் வரை காவல்துறையின் உதவி தேவை. அதனால் அவர்கள் என்ன செய்தாலும் அவர்களை பகைத்து கொள்ள கூடாது என்று கருணாநிதி விரும்பினார். இந்த நிலையில் இருந்து மாறி டெல்லி முதல்வர் காவல்துறை பற்றி கடுமையாக விமர்சித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.


கிரிமினல்களின் புகலிடம்தான் காவல்துறை: இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் குற்றங்களுக்கு முக்கிய காரணமே போலீஸ் துறைதான். இவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று கொண்டு மக்களுக்கு சேவை புரிவதை விட்டு ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்குமே சேவை புரிகிறார்கள்.கள்ளசாராயம், ரவுடிசம் விபச்சாரம் கொலைகொள்ளை போன்ற அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் மாமூல் வாங்கி கொண்டு துணை போகிறார்கள். இந்த சமூக விரோத செயல்கள் நடக்காத ஊர்களாக இருந்தால் இவர்களே இதை ஊக்குவித்து மாமூல் வேட்டையை தொடங்குகிறார்கள். சொல்வாக்கு இல்லாத யாராலும் காவல் நிலையத்திற்குள் நுழைய கூட முடியாது. காவல் நிலையத்திற்கு, அதிகாரம்படைத்தவன், செல்வந்தன் புகார் கொடுக்க வந்தால், அவர்களை உட்கார வைத்து மரியாதையாக பேசுவார்கள். அதே சமயம் ஏழைகள் காவல் நிலையத்தை அணுகினால் அவர்களை வேண்டாத விருந்தாளி போல நாகரிகம் இல்லாமல் நடத்துவார்கள்.


காவல்துறை பணிக்கு உடல் தகுதி மட்டும் போதுமா: காவல்துறைக்கு ஆட்களை எடுக்கும் பொழுது உடல் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் நன்னடத்தைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருவரை காவல்துறை பணிக்கு எடுக்கும் முன்பு அவர்கள் படித்த பள்ளிக்கூடம், கல்லூரி, மற்றும் ஊரில் உள்ள பொதுநல அமைப்புகள் என்று பல இடங்களில் இருந்து நன்னடத்தை சான்றிதழ்கள் பெற்று சமர்பிக்க வலியுறுத்தப்பட வேண்டும். போலீசை பொதுமக்களுடன் கனிவாக பேசவும், அவர்களுக்கு மரியாதை கொடுக்கவும் கற்று கொடுக்க வேண்டும். காவல்துறையில் பணியாற்ற ரவுடிகள் தேவையில்லை மனிதாபிமானம் கொண்ட நல்லவர்கள்தான் அவசியம். ஆகவே உடல் தகுதியை விட நன்னடத்தைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் காவல்துறை என்பது பொதுமக்களின் நண்பன் என்கிற நிலை உருவாகும்.







Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: